செய்திகள்
ரெஸ்டாரெண்ட் டாய்லெட்டில் ரகசிய கேமிரா: நடிகை ரிச்சா அதிர்ச்சி

மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனேவில் பிரபல ரெஸ்டாரெண்ட் ஒன்றில் சமீபத்தில் இளம்பெண் ஒருவர் கழிவறைக்கு சென்றபோது சுவற்றில் இருந்த துளையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இதுகுறித்து புகார் அளித்தும் ஓட்டல் நிர்வாகம் இதனை கண்டுகொள்ளவில்லை
உடனடியாக அந்த கேமிராவை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். இந்த டுவிட்டை பார்த்த பிரபல நடிகை ரிச்சா சட்டா அந்த டுவீட்டை புனே போலீசாருக்கு டேக் செய்து ட்வீட் செய்தார்.
நடிகை ரிச்சாவின் டுவீட்டை பார்த்த போலீசார் உடனடியாக அந்த ரெஸ்டாரெண்ட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ரெஸ்டாரெண்ட் நிர்வாகம் அளித்த தகவலின்படி கழிவறைகளை சுத்தம் செய்ய ஒப்பந்தம் செய்த நிறுவனத்தின் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
