ரெக்கார்டு பிரேக் பண்ண வாய்ப்பு கொடுக்குமா இந்த மழை?

மான்செஸ்டர் :

இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றால் எதிர்பார்ப்பிற்குப் பஞ்சம் இருக்காது. உலகக்கோப்பை ஆரம்பித்ததிலிருந்து இந்த ஆட்டத்திற்காகவே காத்துள்ளனர்.

காவு வாங்கக் காத்திருக்கும் மழை:

 எந்த அணி வெற்றி பெறும் என்பதைத் தாண்டி ஆட்டம் முழுவதும் நடக்கனும் அதை நாங்க பாக்கனும்னு இருக்காங்க ரசிகர்கள். ஆனால், மழை மட்டும் வராம இருக்கணும் என்றும் எச்சரிக்கிறார்கள்.

ரெக்கார்டு பிரேக் பண்ண வாய்ப்பு கொடுக்குமா இந்த மழை?

ரசிகர்களின் பேரார்வம்:

இந்தியாவில் மற்ற அணிக்கு எதிராக இந்தியா ஆடும் கிரிக்கெட் போட்டிகள் பார்க்காதவர்கள் கூட இந்தியா – பாகிஸ்தான் போட்டியை மட்டும் தொலைக்காட்சியில் பார்ப்பார்கள். கிரிக்கெட் மீது துளியும் ஆர்வம் இல்லாதவர்கள் கூட ஆட்டத்தின் இறுதியை எதிர்நோக்கியே இருப்பர்.

இந்த ஆட்டத்திற்கு மட்டும் இவ்வளவா டிக்கெட் விலை?

இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக காலம் காலமாக இருந்து வருகிறது. இந்தப் போட்டியின் டிக்கெட் விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் முடிவடைந்தது. 23,500 டிக்கெட்களை வாங்க சுமார் 7 லட்சம் மக்கள் விண்ணப்பித்து இருந்தனர். குறைந்தபட்சமாக 80 ஆயிரம் வரை இருந்தது இந்த டிக்கெட்.

2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டியினை சுமார் 49.5 கோடி மக்கள் பார்த்துள்ளார்கள்.

மழையாரே கொஞ்சம் விட்டுடுங்க… நாங்க பாவம்

இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் எதிர்பார்ப்பு ஒரு புறம் இருக்கு, மழை  மட்டும் வராம இருக்கணுமே என ரசிகர்கள், விளம்பர நிறுவனங்கள், தொலைக்காட்சி, முன்னாள் வீரர்கள் என அனைவருமே பீதியில் உள்ளனர்.

கவலையே வேண்டாம்:

வானிலை அறிவிப்பின்படி, சற்று மிதமாகவே உள்ள வானிலையால், ஆட்டம் குறுக்கிட்டாலும் ரத்தாக வாய்ப்பிலை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியாவா? பாகிஸ்தானா? மழையா? என்றில்லாமல் நிதானமாக ஆட்டத்தைப் பார்க்கலாம்.