ராமலிங்கத்தை கொலை செய்தது யார்? புதிய தடயம் கிடைத்தது

மத மாற்றத்தை தடுக்க முயற்சித்த திருபுவனம் ராமலிங்கம் குறிப்பிட்ட ஒரு மதத்தினர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இருந்தனர்.

இந்த நிலையில் கொலையாளிகள் பயன்பாடுத்திய கார் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர். :திருபுவனத்தில் ராமலிங்கத்தை கொலை செய்தவர்கள் பயன்படுத்திய ஸ்விப்ட் கார் திருச்சியில் கைப்பற்றப்பட்டதாகவும் அந்த காரில் இருக்கும் ஆதாரங்களை வைத்து அடுத்தகட்ட விசாரணையை துவக்கவிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ராமலிங்கத்தை கொலை செய்த கொலையாளிகளை விரைவில் கண்டுபிடித்து அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று ராமலிங்கத்தின் உறவினர்களும், அந்த பகுதியை சேர்ந்த மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.