ரஜினி வாய்ஸ் எங்களுக்குத்தான்! போட்டி போடும் அதிமுக, பாஜக,


வரும் பாராளுமன்ற தேர்தலில் தனது ஆதரவு யாருக்கும் இல்லை என ரஜினிகாந்த் தெளிவாக தனது அறிக்கையில் விளக்கியிருந்தும் அவருடைய ஆதரவு தங்களுக்குத்தான் என பாஜகவும், அதிமுகவும் தெரிவித்துள்ளது.

ரஜினி அறிக்கை குறித்து அமைச்சர் ஆர்.வி,உதயகுமார் கூறியபோது, ‘தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பவருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று ரஜினி கூறியிருக்கின்றார். தற்போது தண்ணீர் பிரச்சினையை அதிமுக அரசுதான் தீர்த்து வருகிறது. அதனால் அதிமுகவுக்கு வாக்களிக்கத்தான் ரஜினி இப்படி சொல்லி இருக்கிறார் என்றார்.

அதேபோல் ரஜினியின் இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த தமிழிசை செளந்திரராஜன், ‘ரஜினியின் அறிக்கை தெளிவான அறிக்கை பாஜகவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எங்களை பொறுத்தவரை அறிக்கையை நேர்மையாக தான் பார்க்கிறோம் அப்போதே நதிநீர் இணைப்புக்கு ரூ.1 கோடி கொடுத்தவர் ரஜினிகாந்த்’ என்று கூறியுள்ளார்.