Connect with us

ரஜினியின் அதிசயம் பேட்டியும் சீமானின் பதிலடியும்!

செய்திகள்

ரஜினியின் அதிசயம் பேட்டியும் சீமானின் பதிலடியும்!

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வரும் சீமான், இன்று ரஜினிகாந்த் அளித்த பேட்டி ஒன்றுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்துள்ளார்.

கோவாவில் கோல்டன் ஐகான் விருதினை பெற்று இன்று சென்னை திரும்பிய ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘2021ஆம் ஆண்டு தமிழக மக்கள், தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவார்கள் என்றும் கமலுடன் இணைந்தால் யார் முதல்வர் வேட்பாளர் என்பது பின்னர் ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ரஜினியின் இந்த பேட்டிக்கு பதிலடி கொடுத்த சீமான், ‘‘அதீத ஊடக வெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் என்னும் வெற்றுப்பிம்பம் இனமான தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021ல் நடக்கும், நடந்தே தீரும் என்றும், தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும் என்கிற நினைப்பிலும், மிதப்பிலும் ரஜினிகாந்த் பேசி வருகிறார் என்றும் தெரிவித்தார்.,

Continue Reading

அதிகம் படித்தவை

To Top