மோடி அரசு தமிழ் மொழியை வளர்க்கவே செய்கிறது- நிர்மலா சீதாராமன்

இந்தி திணிப்பெல்லாம் மோடி அரசு செய்யவில்லை. இந்தி திணிப்பு என்பது உங்களுக்கு கிடைத்த தவறான தகவல். என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

தபால் துறையில் தபால்காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக முன்னதாக எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் உள்ள கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன.


இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாராளுமன்றத்திலும் இப்பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளது. 

மோடி அரசு தமிழ் மொழியை வளர்க்கவே செய்கிறது- நிர்மலா சீதாராமன்


மாநிலங்களவையில் பேசிய மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத், நடந்த தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படும் என அறிவித்தார். 

தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் அனைத்திலும் தேர்வு நடத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

முன்னதாக, இந்த விவகாரத்தை தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் பாராளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பினர். தபால்துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், தேர்வை ரத்து செய்துவிட்டு தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் தேர்வை நடத்தும்படி வலியுறுத்தினர். 

இதுதொடர்பாக மத்திய மந்திரி விளக்கம் அளிப்பார் என தெரிவிக்கப்பட்டது. இந்த உறுதிமொழியை ஏற்காத அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தற்போது தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தபால் துறை தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. 


�V����T