Connect with us

மோடியின் பயணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் சீனா!

செய்திகள்

மோடியின் பயணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் சீனா!

பாரத பிரதமர் மோடி அருணாச்சல பிரதேசத்துக்கு சென்ற நிலையில் அவருடைய பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.<

அருணாச்சல பிரதேசத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் கடந்த பல ஆண்டுகளாக காய் நகர்த்தி வரும் சீனா, அம்மாநிலத்தை இந்தியாவின் ஒரு பகுதி என சீனா ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை. மேலும் அந்த பகுதிக்கூ இந்திய தலைவர்கள் செல்வது இரு நாட்டு உறவை மேலும் சிக்கலாக்கும் என்றும் சீனா அவ்வப்போது மிரட்டி வருகிறாது.

இந்த நிலையில் பிரதமரின் அருணாச்சல பிரதேச பயணத்திற்கு சீனாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதற்கு இந்திய வெளியுறவுத் துறை உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது

அருணாச்சல பிரதேசம் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அதை ஒரு போதும் விட்டுத்தர முடியாது என்றும் இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது. மேலும் இதுகுறித்த எல்லை பிரச்னைக்கு இந்தியாவும் சீனாவும் 21 முறை பேச்சு நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

பொழுதுபோக்கு

பீட்சாவுக்கு 7 வயது

To Top