Connect with us

மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம்: எம்.எல்.ஏ கருத்துக்கு ரசிகர்கள் அதிர்ச்சி

பொழுதுபோக்கு

மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம்: எம்.எல்.ஏ கருத்துக்கு ரசிகர்கள் அதிர்ச்சி

தளபதி விஜய்க்கு தமிழகத்தை போலவே ஏராளமான ரசிகர்கள் இருப்பதாகவும், குறிப்பாக மம்முட்டி, மோகன்லாலை விட விஜய்க்கு அதிக ரசிகர்கள் என்றும் கேரள மாநில ஜார்ஜ் எம்.எல்.ஏ என்பவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சமீபத்தில் கைரளி என்ற தொலைக்காட்சியில் சினிமா குறித்த ஒரு விவாத நிகழ்ச்சி நடந்தது. அதில் ஜார்ஜ் எம்.எல்.ஏ உள்பட ஒருசிலர் கலந்து கொண்டனர். அப்போது விஜய்க்கு கேரளாவில் உள்ள ரசிகர்கள் குறித்த பேச்சுவந்தபோது, கேரளாவில் முன்னணி மலையாள நடிகர்களான மம்முட்டி, மோகன்லாலுக்கு உள்ள ரசிகர்களை விட விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பதாக ஜார்ஜ் எம்.எல்.ஏ கூறினார்.

இவருடைய கருத்துக்கு இந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மட்டுமின்றி மம்முட்டி மோகன்லால் ரசிகர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top