மெட்ரோ இயக்குனருடன் இணையும் விஜய் ஆண்டனி

நடிகர் விஜய் ஆண்டனி தற்போது பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் நடித்து வரும் ‘தமிழரசன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் அவர் ‘பாலிடிக்ஸ்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தாமாகியுள்ளார்.

இந்த படத்தை அனந்தகிருஷ்ணன் என்ற இளம் இயக்குனர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு சிரிஷ், பாபிசிம்ஹா நடிப்பில் வெளிவந்த ‘மெட்ரோ’. படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தா படத்தை TD ராஜா தயாரிக்கவுள்ளார். இந்த படம் குறித்த தகவலை விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும், விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஒரு பிரபல நடிகை நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.