Connect with us

மூன்று மாவட்டங்களில் கனமழை: மீண்டும் விடுமுறையா?

செய்திகள்

மூன்று மாவட்டங்களில் கனமழை: மீண்டும் விடுமுறையா?

வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் பெய்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை ஓரளவு குறைந்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று மீண்டும் சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருவதையடுத்து மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது

நேற்று வெளியான வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் இன்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும், எனவே மீனவர்கள் இன்றும் நாளையும் இந்த பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது

Continue Reading
To Top