மு.க.ஸ்டாலின் – முகேஷ் அம்பானி சந்திப்பு: பரபரப்பு தகவல்


முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், ஷோல்கா மேதாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் மகனின் திருமண அழைப்பிதழை கடந்த சில நாட்களாக முக்கிய தலைவர்கள், பிரபலங்களுக்கு முகேஷ் அம்பானி கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் ரஜினியின் மகள் செளந்தர்யாவின் திருமணத்திற்கு தனது மனைவியுடன் வந்த முகேஷ் அம்பானி, நேற்று தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்து தந்தஹு மகனின் திருமணத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொண்டு அழைப்பிதழை அளித்தார். மு.க.ஸ்டாலினும் திருமணத்திற்கு வருவதாக உறுதி அளித்தார்.

முன்னதாக முகேஷ் அம்பானியையும், அவரது மனைவி நீடா அம்ப்னி அவர்களையும் ஸ்டாலினும், அவரது மனைவி துா்காவும் வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது