Connect with us

முதலாவது டி20: சாதனை செய்து வெற்றி பெற்ற இந்திய அணி

விளையாட்டு

முதலாவது டி20: சாதனை செய்து வெற்றி பெற்ற இந்திய அணி

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

இந்த நிலையில் இந்த வெற்றியை இந்திய அணி 2 சாதனைகளுடன் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் சாதனை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் அதிகபட்ச டி20 ஸ்கோர் நேற்று எடுத்த 94 ரன்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது

இரண்டாவது சாதனையாக இந்திய அணியின் அதிகபட்ச சேஸிங் ஸ்கோர் நேற்று எடுத்த 209 ரன்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் கடந்த 2009ஆம் ஆண்டு 207 என்ற இலக்கை சேஸ் செய்து இந்திய அணி வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

ஸ்கோர் விபரம்
மே.இ.தீவுகள் அணி: 207/5 20 ஓவர்கள்

ஹெட்மயர்: 56
லீவீஸ்: 40
பொல்லார்டு: 37

இந்திய அணி: 209/4 18.4 ஓவர்கள்

விராத் கோஹ்லி: 94
கே.எல்.ராகுல்: 62
ரிஷப் பண்ட்: 18

ஆட்டநாயகன்: விராத் கோஹ்லி

இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி வரும் டிசம்பர் 8ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறும்

Continue Reading
To Top