மீண்டும் பாக்யராஜ் ராஜினாமா! அதிகரிக்கின்றதா அழுத்தம்?

மீண்டும் பாக்யராஜ் ராஜினாமா! அதிகரிக்கின்றதா அழுத்தம்?

K-Bhagyaraj

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ படத்தின் கதை பிரச்சனையில் தனக்கு ஒருசில அசெளகரியங்கள் ஏற்பட்டதால் சமீபத்தில் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பதவியை இயக்குனர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்தார்.

ஆனால் அவரது ராஜினாமாவை எழுத்தாளர் சங்கத்தின் நிர்வாகிகள் ஏற்கவில்லை. கே.பாக்யராஜ் அவர்களே தலைவராக தொடர்வார் என அறிவித்தனர்.

இந்த நிலையில் கே.பாக்யராஜ் மீண்டும் தனது ராஜினாமா கடிதத்தை எழுத்தாளர் சங்கத்துக்கு அனுப்பியுள்ளார். இதனால் சங்க உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.