Connect with us

‘மாமனிதன்’ படத்தில் மாணிக் பாட்ஷாவாக மாறும் விஜய்சேதுபதி

பொழுதுபோக்கு

‘மாமனிதன்’ படத்தில் மாணிக் பாட்ஷாவாக மாறும் விஜய்சேதுபதி


தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இடத்தை நோக்கி மிக வேகமாக சென்று கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. 96, சீதக்காதி உள்பட பல வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் இவர் தற்போது சீனுராமசாமி இயக்கத்தில் ‘மாமனிதன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய்சேதுபதி ஆட்டோ டிரைவராக நடித்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ‘பாட்ஷா’ படத்தில் மாணிக்கமாக மாறி ரஜினி ஆட்டோ ஓட்டியதை போலவே விஜய்சேதுபதியின் இந்த ஆட்டோ கேரக்டருக்கு பின் ஒரு சஸ்பென்ஸ் உள்ளதாம்

விஜய்சேதுபதி, காயத்ரி, குருசோமசுந்தரம் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகிய மூவரும் இணைந்து இசையமைக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்தை தயாரிக்கின்றார்.


Continue Reading

அதிகம் படித்தவை

To Top