Connect with us

‘மாநாடு’ படத்தின் கதை: எடிட்டர் ப்ரவீண் கூறிய ஆச்சரியமான தகவல்

பொழுதுபோக்கு

‘மாநாடு’ படத்தின் கதை: எடிட்டர் ப்ரவீண் கூறிய ஆச்சரியமான தகவல்


நடிகர் சிம்பு தற்போது கோலிவுட் திரையுலகில் மீண்டும் பிசியாகிவிட்டார். செக்க சிவந்த வானம் வெற்றியை அடுத்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சுந்தர் சி இயக்கத்தில் ‘நான் ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு ,தற்போது இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி வரும் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் இந்த படத்தின் எடிட்டர் ப்ரவீண் கே.எல்., இந்த படத்தின் கதை குறித்து தனது டுவிட்டரில் கூறியபோது, ‘ ‘மாநாடு’ படத்தின் கதையை கேட்டு கிறுகிறுத்து போனேன். கதை கேட்டதில் இருந்து என் தலை சுற்றிக் கொண்டு இருக்கிறது. அற்புதம் மற்றும் அசாதாரணமான கதை’ என்று பதிவு செய்துள்ளார்.

அப்படி தலை சுற்றும் அளவுக்கு என்ன கதையாக இருக்கும் என சிம்பு ரசிகர்கள் தலையை பிய்த்து கொண்டிருக்கின்றனர்.

Continue Reading
To Top