Connect with us

மாதவன் பட நாயகியின் காரை பைக்கில் சுற்றி வளைத்த மூன்று நபர்கள்! அதிர்ச்சி தகவல்

செய்திகள்

மாதவன் பட நாயகியின் காரை பைக்கில் சுற்றி வளைத்த மூன்று நபர்கள்! அதிர்ச்சி தகவல்

மாதவன் நடித்த ‘நான் அவள் அது’ என்ற படத்தின் நாயகியாக நடித்தவர் ஷமிதா ஷெட்டி. இவர் பல இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று நடிகை ஷமிதா ஷெட்டி தனது காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மூன்று நபர்கள் மூன்று பைக்கில் வந்து ஷமீதாவின் காரை சுற்றி வளைத்தனர். பின்னர் திடீரென ஷமிதாவின் கார் டிரைவரை சரமாரியாக தாக்கினர்.

இதுகுறித்து ஷமிதாவின் கார் டிரைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மூன்று மர்ம நபர்களை தேடி வருகின்றனர். குடிபோதையில் மூவரும் டிரைவரை தாக்கியதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top