மக்கள் நீதி மய்யம் கலைக்கப்படுகிறதா? திருநாவுக்கரசரின் அதிர்ச்சி தகவல்

மக்கள் நீதி மய்யம் கலைக்கப்படுகிறதா? திருநாவுக்கரசரின் அதிர்ச்சி தகவல்

rahul-kamal

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி ஆரம்பித்து ஆறு மாதமே ஆகியுள்ள நிலையில் கமல்ஹாசசன் ராகுல் காந்தியை சந்தித்தபோது தனது கட்சியை காங்கிரசுடன் இணைப்பதாகக கூறியுள்ளதாக தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி அளித்துள்ளார். அப்படியென்றால் மக்கள் நீதி மய்யம் கட்சி கலைக்கப்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

ஏற்கனவே ஆந்திராவில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கிய சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, ஒரே ஒரு தேர்தலை சந்தித்த பின்னர் கட்சியை நடத்த முடியாமல் காங்கிரஸ் கட்சியுடன் தனது கட்சியை இணைத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

thirunavukarasarஆனால் ஒரு தேர்தலை கூட சந்திக்காமல் கட்சியை இணைக்க கமல், ராகுல்காந்தியிடம் பேசியுள்ளதாக திருநாவுக்கரசர் கூறும் தகவல் அதிர்ச்சியை அளிக்கின்றது.