மக்களின் விஸ்வாசம் இல்லாமல் முதலமைச்சர் ஆக முடியாது ரஜினி குறித்து அப்சரா


அதிமுகவில் இருந்து விலகிய திருநங்கை அரசியல்வாதி அப்சரா என்பவர் சமீபத்தில் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவான மகிளா காங்கிரஸில் பதவி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அப்சரா, ‘ரஜினி உள்பட எந்த நடிகர்களாக இருந்தாலும் மக்களின் விஸ்வாசம் இல்லாமல் முதலமைச்சர் ஆக முடியாது’ என்று கூறினார். கருணாநிதி , எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் படிப்படியாக அரசியலில் முன்னேறியவர்கள். ஆனால் ரஜினி எடுத்தவுடனே முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார்.

எனவே இவ்வாறு நேரடியாக முதலமைச்சர் பதவியை நோக்கி அரசியலுக்கு வரும் நடிகர்களை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்று அப்சரா தெரிவித்தார்.