மக்களவை தேர்தலில் மோடி தமிழகத்தில் போட்டியா?

வரும் மக்களவை தொகுதியில் பாஜக தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்று கருத்துக்கணிப்புகள் கூறி வரும் நிலையில் தமிழகத்தின் ஒரு தொகுதியில் போட்டியிட்டு கருத்துக்கணிப்பை உடைக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடி மக்களவை தேர்தலின் போது தமிழகத்தின் கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏதேனும் ஒரு மக்களவை தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் மற்ற பாஜக வேட்பாளர்களும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.