மகாராஷ்ட்ராவில் பதிவான 3.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம்

அருணாசல பிரதேசத்தில் நேற்று மதியம் 2.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து கமெங் மாவட்டத்தில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

உயிர்சேதமோ, கட்டடங்களுக்கு பாதிப்போ ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து மகாராஷ்ராவின் பால்கார் பகுதியிலும் இன்று காலை 9.17 மணிக்கு 3.5 ரிக்டர் அளவு நில நடுக்கம் பதிவானது. 

மகாராஷ்ட்ராவில் பதிவான 3.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம்

முன்னதாக நேற்று அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சில நொடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் ஜோர்ஹாட்டில் இருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு கமெங் மாவட்டத்தில் பிற்பகல் 2.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தியாவிலேயே, மேகாலயா, நாகாலந்து, சிக்கிம், மணிப்பூர், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில்தான் நில நடுக்கம் அதிகமாக ஏற்படுகிறது. இயற்கை பேரழிவுகளில் இருந்து முன்னெச்சரிக்கையாக தப்பிக்க நவீன இயந்திர கருவிகளை உருவாக்க ஜியாலஜிஸ்டுகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். 

சமீபத்தில், இதேபோல வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மணிப்பூரில் 8 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.