Connect with us

மகாராஷ்டிரா தேர்தல்: காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சிறப்பு சலுகைகள்

செய்திகள்

மகாராஷ்டிரா தேர்தல்: காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சிறப்பு சலுகைகள்

மகாராஷ்டிராவில் கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இந்த மாதம் நடைபெறும் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இந்த நிலையில் இரு கட்சிகளும் கூட்டாக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் ‘தங்களது கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.21 ஆயிரம் ஆக மாற்றப்படும் என்றும், அனைத்து மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 500 சதுர அடி பரப்பளவு வரை உள்ள வீடுகளுக்கு சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வாகன ஓட்டிகளிடம் அதிகமாக வசூலிக்கப்படும் அபராத தொகை குறைக்கப்படும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் கட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top