Connect with us

மகாராஷ்டிராவில் முதல்வர் வேட்பாளர் யார்? பாஜக-சிவசேனா இடையே மோதல்!

செய்திகள்

மகாராஷ்டிராவில் முதல்வர் வேட்பாளர் யார்? பாஜக-சிவசேனா இடையே மோதல்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 21ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன

மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 150 இடங்களிலும், சிவசேனா 124 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இந்த நிலையில் இந்த கூட்டணி வெற்றி பெற்றால் யார் முதலமைச்சர் என்ற கருத்து வேறுபாடு இரு கட்சிகளிடையே நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே தான் முதல்வர் வேட்பாளர் என சிவசேனா கூறிவருவது பாஜகவை அதிருப்தி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது

150 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக, தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், பாஜகவை சேர்ந்த ஒருவர் தான் முதல்வராவார் என்றும் பாஜக தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top