‘பேட்ட’ ஸ்டைலில் தல வீடியோ: இணையத்தில் வைரல்


கிரிக்கெட்டின் தல என்று போற்றப்படும் தோனியின் ‘பேட்ட ஸ்டைல் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த வீடியோ பேட்ட படத்தில் ரஜினி பேசும் முதல் வசனமான ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்ற வசனத்துடன் தொடங்குகிறது. அதன்பின் பேட்ட தீம் மியூசிக்கிற்கு ஏற்றபடி தோனியின் காட்சிகள் கச்சிதமாக பொருத்தப்பட்டுள்ளது.

இந்த வீடியோ டுவிட்டரில் வெளியான ஒருசில நிமிடங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. தல தோனி ரசிகர்கள் இந்த வீடியோவை லைக் செய்து வருவதால் ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் இந்த வீடியோவிற்கு குவிந்து வருகிறது.