புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்: பாஜக தோல்வி குறித்து கமல்


kamal

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் எதிர்பாராத வகையில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக பாஜகவின் கோட்டை என்று கருதப்பட்ட ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை காங்கிரஸிடம் பறிகொடுத்துள்ளது.

இந்த நிலையில் பாஜகவில் இணைவார் என்றும், பாஜகவுடன் கூட்டணி வைப்பார் என்றும் கருதப்பட்ட ரஜினியே இந்த தேர்தல் முடிவு பாஜக தனது செல்வாக்கை இழந்து வருவதை காட்டுவதாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில் ரஜினியை அடுத்து கமல்ஹாசனும் பாஜகவின் இந்த தேர்தல் தோல்வி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கமல் கூறியதாவது: ‘புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம். மக்கள் தீர்ப்பு இது என்று கூறியுள்ளார்.