‘பில்லா’, ‘அஜித் 59’ படத்தின் ஒற்றுமைகள்


தல அஜித் நடித்த ‘பில்லா’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 11 வருடங்கள் முடிந்துவிட்டது. இதனை அஜித் ரசிகர்கள் இணையதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

பில்லா படம் அஜித் நடிப்பில் யுவன்சங்கர் ராஜா இசையில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் ‘வி’ என்று தொடங்கும் இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் உருவாகியது.

இந்த நிலையில் இன்று பூஜை போடப்பட்டிருக்கும் ‘தல 59’ படமும் அஜித் நடிப்பில் யுவன்சங்கர் ராஜா இசையில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் ‘வி’ என்று தொடங்கும் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவொரு அபூர்வ ஒற்றுமையாக கருதப்படுகிறது.