பிரதமர் மோடி திறந்து வைத்த வந்தே மாதரம் எக்ஸ்பிரஸ் முதல் பயணத்திலேயே பிரேக் டவுன்


இந்தியாவின் அதிவேக ரயில் என்று அறிவிக்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என்றும், டெல்லியில் இருந்து வாரணாசிக்கு இந்த ரயில் 3 மணி நேரத்தில் சென்றுவிடும் என்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

நேற்று பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்த இந்த ரயில் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு பயணிகள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் இன்று முதல் பயணத்தை செய்தது

ஆனால் ரயில் கிளம்பிய சில நிமிடங்களில் திடீரென பாதியில் பழுதாகி நின்றது. பிரதமர் தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், முதல் பயணத்திலேயே பழுதானதால் ரயில்வே துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உடனடியாக ரயிலின் பழுதை சரிபார்க்க பொறியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். ரயிலை சோதனை செய்த பொறியாளர்கள் ரயில் அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டு இழந்ததாகவும், தொழில்நுட்ப கோளாறு தற்போதைக்கு சீரமைக்க முடியாததாக உள்ளதாக தெரிவித்ததால் பயணிகள் அனைவரையும் ரயில்வே துறையினர் மாற்று ரயிலில் அனுப்பி வைத்த்னர்.