Connect with us

பாட்ஷா ரஜினி கேரக்டரில் விஜய் சேதுபதி !

பொழுதுபோக்கு

பாட்ஷா ரஜினி கேரக்டரில் விஜய் சேதுபதி !


இந்த ஆண்டு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ஜூங்கா , செக்க சிவந்த வானம் , 96 , சீதக்காதி ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை பெற்றது. இதனை அடுத்து அவர் சீனுராமசாமி இயக்கத்தில் நடித்து வரும் “மாமனிதன்” படத்தில் அவர் நடித்துள்ள கேரக்டர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் “மாமனிதன் ” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவர் ஆக நடித்து வருகிறார். பாட்ஷா படத்தில் ரஜினி ஆட்டோ டிரைவராக நடித்தது போல் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டரும் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்க படுகிறது.

மேலும் இப்படத்தில் இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என மூன்று பேரும் இணைந்து இசையமைக்க இருப்பதாக யுவன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து வருகிறார்.


வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top