Connect with us

பாஜகவில் இணையும் ஜீவஜோதி: கோட்டைவிட்ட அதிமுக!

செய்திகள்

பாஜகவில் இணையும் ஜீவஜோதி: கோட்டைவிட்ட அதிமுக!

சரவணபவன் உரிமையாளருக்கு எதிராக பாலியல் பலாத்கார வழக்கு தொடுத்து வெற்றியும் பெற்ற ஜீவஜோதி தற்போது பாஜகவில் இணைந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

சரவணபவன் வழக்கில் நீண்ட காலம் சட்டப் போராட்டம் நடத்திய ஜீவஜோதிக்கு சமீபத்தில் நீதி கிடைத்தது. சுப்ரீம் கோர்ட்டில் சரவணபவன் ராஜகோபால் குற்றம் நிரூபிக்கப் பட்டதை அடுத்து அவருக்கு தண்டனை கிடைத்தது. ஆனால் தண்டனையை அனுபவிக்கும் முன்னரே அவர் இயற்கையாக மரணம் அடைந்து விட்டார்.

இந்த நிலையில் ஜீவஜோதி தற்போது அரசியலில் குதித்துள்ளார். அவர் பாஜகவில் இணைந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஜீவஜோதி கணவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் பாஜகவின் முக்கிய பிரமுகர் என்பதால் அவர் மூலம் ஜீவஜோதி பாஜகவில் இணைந்து உள்ளதாக தெரிகிறது

உண்மையில் ஜீவஜோதி வழக்கிற்கு அதிக உதவி செய்தவர் ஜெயலலிதா தான் என்பதால் அவர் அதிமுகவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுகவில் இணையும்படி அவரை யாரும் கட்சி நிர்வாகிகள் அணுகவில்லை என்பதால் அவர் பாஜகவில் சேர்ந்து விட்டதாக கூறப்படுகிறது

ஏற்கனவே நமீதா பாஜகவில் சேர்ந்து உள்ள நிலையில், நயன்தாரா பாஜகவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது ஜீவஜோதி அக்கட்சியில் சேர்ந்து உள்ளதை அடுத்து பாஜக உண்மையிலேயே தமிழ்நாட்டில் வளர்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top