பாஜகவில் இணைகிறாரா நயன்தாரா? பெரும் பரபரப்பு

கடந்த சில மாதங்களாகவே கோலிவுட் திரையுலகில் உள்ள பல பிரபலங்கள் பாஜகவில் இணைந்து வரும் நிலையில் நடிகை நயன்தாராவும் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

நேற்று கன்னியாகுமரியில் பகவதியம்மன் கோவிலிலும், திருச்செந்தூரில் முருகனையும் தரிசனம் செய்த நயன்தாரா திருச்செந்தூரில் பாஜக முன்னாள் எம்பி நரசிம்மன் அவர்களை சந்தித்து பேசியதாகவும் அப்போது நயன்தாராவை பாஜகவில் இணையுமாறு நரசிம்மன் வேண்டுகோள் விடுத்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இப்போதைக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றாலும் பின்னர் பார்க்கலாம் என்று நரசிம்மனிடம் நயன்தாரா பதில் கூறியதாக தெரிகிறது சமீபத்தில் என்கவுண்டர் குறித்து நீண்ட அறிக்கை விட்ட நயன்தாராவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதை அறிந்து அவரை பாஜகவிற்கு இழுக்க அக்கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது