Connect with us

பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அளித்த அரசு

செய்திகள்

பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அளித்த அரசு

அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகவிருப்பதை அடுத்து உத்தரப்பிரதேசத்தில் இன்று முதல் திங்கள் வரை அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்படுவதாகவும் உபி மாநில பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி டெல்லி, கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் ஜம்மு ஆகிய மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10.30 மணிக்கு அயோத்தி தீர்ப்பு வெளியாகவிருக்கும் நிலையில் பதட்டமான சூழல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் உத்தர பிரதேசத்தில் 78 ரயில் நிலையங்கள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அயோத்தி வழக்கு குறித்த கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிடவும் பைசாபாத் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top