Connect with us

நெல் ஜெயராமன் மறைவு குறித்த விஷால் வெளியிட்ட இரங்கல் செய்தி

செய்திகள்

நெல் ஜெயராமன் மறைவு குறித்த விஷால் வெளியிட்ட இரங்கல் செய்தி

vishal

நெல் ஜெயராமன் இன்று காலை காலமானதை அடுத்து விவசாயிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ள்து. இந்த நிலையில் நெல் ஜெயராமன் மறைவிற்கு சற்றுமுன் இரங்கல் தெரிவித்து நடிகர் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இயற்கை விவசாய போராளி வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நெல் ஜெயராமன் அவர்கள். மரபணு மாற்ற விதை திட்டங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்தவரும், 170க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட சாதனை மனிதர்

பாரம்பரிய நெல் விதைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வையும், விவசாயத்தில் ஆர்வம் காட்டும் இளைய சமுதாயத்தினர் மத்தியில் எடுத்து செல்வதில் மிக மிக முக்கியமானவர். நெல் ஜெயராமன் அவரை இழந்து வாடும் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top