Connect with us

நீண்ட தூர விமான பயணத்தில் உடற்பயிற்சி: ஆஸ்திரேலியாவின் அசத்தல் திட்டம்!

செய்திகள்

நீண்ட தூர விமான பயணத்தில் உடற்பயிற்சி: ஆஸ்திரேலியாவின் அசத்தல் திட்டம்!

நீண்ட பிரயாணம் மேற்கொள்ளும் விமானத்தில் பயணிகள் நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள அங்குள்ள ஒரு தனியார் விமான நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் வரை சுமார் 11,060 மைல்களுக்கு காண்டாஸ் என்ற விமானம் இயக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை புறப்பட்ட இந்த விமானம் இடையில் எங்கும் நிற்காமல் சிட்னி நகரை அடைந்தது.

கிட்டத்தட்ட 20 மணி நேர பயணம் என்பதால் பயணிகள் இந்த விமானத்தில் ஒரே இடத்தில் ஒருநாள் முழுவதும் உட்கார்ந்து பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளடு. இதனையடுத்து இந்த விமானத்தில் பயணிப்பவர்களுக்கு உளவியல் ரீதியில் பிரச்சனை ஏற்படுவதை தவிர்க்க உடற்பயிற்சிகள் அளிக்கப்படுவதாகவும், விமானம் பயணித்துக் கொண்டிருக்கும்போதே அயர்ச்சி ஏற்படாமல் இருக்க நடைபயிற்சி, சிறு சிறு உடற்பயிற்சிகளும் மேற்கொள்ள வசதிகள் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பயணிகள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top