நாளை விஸ்வாசம்’ டீசர்? ரோஹினி திரையரங்கு உரிமையாளர் டுவீட்டால் பரபரப்பு

தல அஜித், நயன்தாரா, தம்பிராமையா உள்ளிட்ட பலர் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் தயாராகிவிட்டதாகவும், மோஷன் போஸ்டர் போலவே திடீரென முன் அறிவிப்பு இன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை ரோஹினி திரையரங்கு உரிமையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் நாளை அஜித் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருப்பதாக பதிவு செய்துள்ளார். அந்த இன்ப அதிர்ச்சி விஸ்வாசம் டீசராகத்தான் என்று அஜித் ரசிகர்கள் கணித்துள்ளனர்.

விஸ்வாசம் படத்தை பொருத்தவரை இதுவரை ஒரே ஒரு போஸ்டர் மற்றும் ஒரு மோஷன் போஸ்டர் மட்டுமே வந்துள்ளதால் இனி புரமோஷன் பணி முழு வேகத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.