நாட்டிங்ஹாமில் மழைக்கு ஒரு அளவே இல்லாமல் போச்சு

நாட்டிங்ஹாம்:

மிகுந்த எதிர்பார்ப்பினைக் கொண்டிருந்த இந்தியா, நியூசிலாந்து களமிறங்கும் போட்டி மழையால் தாமதமாகி உள்ளது, இதனால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இப்படியுமா செய்யும் இந்த மழை:

தென்னாப்ரிக்கா- வெஸ்ட் இண்டீஸ், இலங்கை -வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த போட்டிகள் மழை காரணமாக கைவிடப்பட்டு இரண்டு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக இந்தியா,நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியும் மழையால் பாதிக்கப்படும் என்ற தகவல் வெளியானது.

நாட்டிங்ஹாமில் மழைக்கு ஒரு அளவே இல்லாமல் போச்சு

பெற்ற வெற்றிகள்:

இந்திய அணி தனது 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவையும், அடுத்த ஆட்டத்தில் 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி வலுவான நிலையில் உள்ளது.

நியூசிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையையும், 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும், 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும் தோற்கடித்து முதலிடம் வகிக்கிறது.

ஆர்வத்தில் ரசிகர்கள்:

இதுவரை தோல்வியை சந்திக்காத இரு அணிகளும் தங்களின் வெற்றிப்பயணத்தை தொடரவேண்டும் என்ற வெறியோடு ஆடும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை என்று ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

குறைக்கப்படவிருக்கும் ஓவர்கள்:

3 மணிக்கு நடைபெற இருந்த ஆட்டம் மழையின் காரணமாக 3.30 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால்  4 மணிக்கு ஆட்டம் தொடங்கவுள்ளது. இதனால் ஓவர்கள் குறைக்கப்பட்டு ஆட்டத்தைத் தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இனியும் தொடருமா?

இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பல போட்டிகள், மழை காரணமாக தடைப்பட்டு வருகிறது. அதனால், கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.