Connect with us

நாங்கள் ஒண்ணும் முட்டாள்கள் இல்லை: காயத்ரி ரகுராமுக்கு ராமதாஸ் பதிலடி?

செய்திகள்

நாங்கள் ஒண்ணும் முட்டாள்கள் இல்லை: காயத்ரி ரகுராமுக்கு ராமதாஸ் பதிலடி?


இந்துக்கோயில் குறித்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியதை அடுத்து, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது டுவிட்டரில் பதிவு செய்த நடிகை காயத்ரி ரகுராம், தனக்கு டாக்டர் ராமதாஸ் அவர்கள் ஆதரவு தர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்

இந்த நிலையில் ’காயத்ரி ரகுராம் வேண்டுமானால் எச்.ராஜாவையோ, எஸ்வி சேகரையோ துணைக்கு அழைத்துக் கொள்ளட்டும் என்றும் பார்ப்பனர்களுக்கு அடியாள் வேலை பார்க்க வன்னியர்கள் ஒன்றும் முட்டாளில்லை என்றும் காலம் மலையேறிவிட்டது எங்களுக்கும் புத்தி வந்தது விட்டது என்று அவரிடம் சொல்லுங்கள் என்றும் ராம்தாஸ் என்ற பெயருடைய டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது

அதன் பின்னர்தான் இந்த பதிவு டாக்டர் ராமதாஸ் அவர்களின் போலியான டுவிட்டர் பக்கம் என்றும் உண்மையில் ராமதாஸ் இப்படி ஒரு கருத்தைக் கூறவில்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. யாரோ ஒரு மர்ம நபர் ராம்தாஸ் பெயரில் காயத்ரிக்கு பதிலடி கொடுத்தது தெரியாமல் நெட்டிசன்கள் அதனை ரீட்வீட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top