நடிகை கேரக்டரில் ஓவியா நடிக்கும் படம் இதுதான்


பிக்பாஸ் புகழ் ஓவியா சமீபத்தில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தில் நடித்த நிலையில் தற்போது அவர் ‘காஞ்சனா 3, ‘களவாணி 2’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பிக்பாஸ் முதல் சீசனின் சாம்பியன் ஆரவ் ஹீரோவாக நடித்து ராஜபீமா படத்தில் ஓவியா ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார் என்பது தெரிந்ததே

இந்த படத்தில் ஓவியா, நடிகையாக நடிக்கவிருப்பதாகவும், ‘பிதாமகன்’ படத்தில் சிம்ரன் நடிகையாக தோன்றி ஒரு நடனத்தில் பங்கு பெற்றது போல் இந்த படத்தில் ஓவியா நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் நாயகன் ஆரவ், ஓவியா ஆர்மியின் உறுப்பினராக இருப்பது போன்றும், ஓவியாவின் தீவிர ரசிகரான இவர் ஓவியாவை கனவில் நினைத்து டூயட் பாடுவது போன்றும் காட்சிகள் உள்ளதாம்

நரேஷ் சம்பத் இயக்கத்தில் எஸ்.மோகன் தயாரிக்கும் இந்த படத்தில் ஆரவ்வுக்கு ஜோடியாக ஆஷிமா என்ற நடிகை நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது