தோழியுடன் ஓடிப்போன டிக்டாக் வினிதாவுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி தகவல்

சிவகெங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த நர்ஸ் வினிதா என்ற பெண் டிக்டாக் மோகத்திற்கு அடிமையாகி கணவர் ஆரோக்கிய லியா மற்றும் பெற்றோர்களின் அறிவுரையையும் மீறி, டிக்டாக் தோழி அபி என்பவருடன் தலைமறைவானார். மேலும் வினிதா தனது தாயார் வீட்டில் இருந்த 25 சவரன் நகையையும் எடுத்து கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வினிதாவின் தாயாரும் கணவரும் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வினிதாவையும் அபியையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்றிரவு திடீரென போலீஸ் ஸ்டேசனில் ஆஜரான வினிதா, ‘தான் எங்கும் யாருடனும் ஓடிப்போகவில்லை என்றும், அபி தனது தோழி அபி மட்டுமே என்றும் அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய கணவரும் தாயாரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் காவல் நிலைய அதிகாரிகளிடம் கூறினார்.

மேலும் தான் வீட்டை விட்டு செல்ல தனது கணவரே காரணம் என்றும், அவர் தன்னை தாக்கியதால் தான் வீட்டை விட்டு சென்றதாக கூறிய வினிதா, தன் மீது எந்த தவறும் இல்லை என்றும் விளக்கம் அளித்தார். அவரிடம் போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.