Connect with us

தேர்தலில் கூட்டணி என்றாலும் பாஜகவை எதிர்க்கும் போராட்டம் செய்யும் சிவசேனா

செய்திகள்

தேர்தலில் கூட்டணி என்றாலும் பாஜகவை எதிர்க்கும் போராட்டம் செய்யும் சிவசேனா

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் கூட்டணியில் இணையுமா? என கடந்த சில வாரங்களாக இழுபறியில் இருந்த நிலையில் ஒருவழியாக அமித்ஷா, இந்த கூட்டணியை சமீபத்தில் உறுதி செய்தார்

மகாராஷ்டிராவில் பாஜக 150 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியுடவுள்ளன. அதேபோல் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி இணைந்து கூட்டணியாக போட்டியிடுகின்றன

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாகவே அரே காடுகளில் உள்ள மரங்களை வெட்டிய பிரச்சினை பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாஜக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது

இந்த விவகாரத்தில் பாஜக அரசை எதிர்த்து அதன் கூட்டணி கட்சியான சிவசேனா கட்சியினர் போராட்டம் நடத்துவதால் பாஜகவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது

இந்த போராட்டம் காரணமாக ஒரு சில சிவசேனா கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடும் நிலையில் சிவசேனா கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top