Connect with us

தெலுங்கர்கள் இல்லையெனில் தமிழகம் முன்னேற முடியாது: ராதாரவி

பொழுதுபோக்கு

தெலுங்கர்கள் இல்லையெனில் தமிழகம் முன்னேற முடியாது: ராதாரவி

தெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழகத்தில் வேட்பாளர்களே இல்லை என்றும் தெலுங்கர்களால்தான் தமிழகம் முன்னேறி வருவதாகவும் திரைப்பட நடிகர் ராதாரவி கூறியுள்ளார்

இன்று நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் பேசிய ராதாரவி ’தமிழகத்தின் தென்பகுதியில் பெரும்பாலானோர் தெலுங்கர்கள் தான் இருக்கின்றார்கள். தென் தமிழகத்தில் தேனி, போடி, ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் விருதுநகர், சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தெலுங்கர்கள் அதிகம்இருக்கின்றார்கள் என்றும், அந்த பகுதியில் பெரும்பாலும் தெலுங்கர்கள் தான் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களாக போட்டியிடுவதாகவும் அவர் பேசினார்

தெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழகத்தின் வளர்ச்சி இல்லை என்றும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு தெலுங்கர்களின் பயன் பெருமளவில் உள்ளதாகவும் அவர் கூறினார். அதேபோல் திரைப்படத்துறையிலும் தெலுங்கர்கள் அதிகம் இருப்பதாகவும் திரைப்படத்துறையில் உள்ள பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் தெலுங்கர்கள் தான் என்றும் அவர் கூறினார்

இந்த நேரத்தில் நானும் ஒரு தெலுங்கர் என்பதை கூறிக்கொள்வதில் பெருமை அடைகிறேன் என்றும் இருப்பினும் நாம் தமிழினம், தெலுங்கர் இனம் என பிரித்து பேசாமல் நாம் அனைவரும் திராவிட இனம் என்று ஒற்றுமையாக இருந்தால் தென்னிந்தயா நல்ல முன்னேற்றத்திற்கு வரும் என்று ராதாரவி தனது பேச்சில் குறிப்பிட்டார்

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top