Connect with us

தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளரை திணறடித்த அஜித் ரசிகர்கள்

பொழுதுபோக்கு

தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளரை திணறடித்த அஜித் ரசிகர்கள்


அஜித் நடிப்பில் சிவா இயக்கிய ‘விஸ்வாசம்’ படத்தின் ‘அடிச்சு தூக்கு’ சிங்கிள் பாடல் நேற்று முன் தினம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் ஆர்வக்கோளாறில் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினின் டுவிட்டர் பக்கத்தில் அடிச்சு தூக்கு போஸ்டர் ஒன்றை பதிவு செய்தார்.

இந்த போஸ்டரை பார்த்த ஸ்டெயின் ‘இது என்ன? என்று கேட்டார். அவர் கேட்ட அடுத்த நிமிடம் அஜித் ரசிகர்கள் இந்த போஸ்டர் குறித்தும், அஜித் குறித்தும், அவர் நடித்த விஸ்வாசம் குறித்தும் தொடர்ச்சியாக கமெண்ட் பகுதியில் பதிவு செய்து அவரை திணறடித்தனர்.

இதனால் இன்ப அதிர்ச்சியான ஸ்டெயின் திக்குமுக்காடி போனார். சாதாரணமாக அவர் பதிவு செய்யும் ஒரு டுவீட்டுக்கு மிகச்சில கமெண்ட்டுக்களே கிடைக்கும். ஆனால் ‘இது என்ன? என்ன நடக்குது இங்கே’ என்ற ஒரே ஒரு பதிவுக்கு ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ்களை பார்த்த ஸ்டெயின் அதிர்ந்து போய்விட்டார்.


Continue Reading

அதிகம் படித்தவை

To Top