திருமலை அருகே மண் சரிந்து ஒருவர் உயிரிழப்பு: பக்தர்கள் அதிர்ச்சி

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே ஸ்ரீமன் நாராயணன் மடத்திற்கான கட்டிடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டிய போது எதிர்பாராத வகையில் மண் சரிந்து ஒருவர் பலியானார். பலியான நபர் அனந்தபுரம் மாவட்டம் கதிரி என்ற பகுதியை சேர்ந்த சூரி என்ற கூலி தொழிலாளி என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாபாவின்நாசம் சாலையில் புதியதாக கட்டடம் கட்டும் பணியில் 4 தொழிலாளர்கள் ஈடுப்பட்டு இருந்ததாகவும், அப்போது திடீரென்று மண் சரிந்ததில் மற்றவர்கள் சுதாரித்து கொண்ட நிலையில் ஒருவர் மட்டும் மண்சரிவில் சிக்கி சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்ததாகவும் இந்த விபத்தை நேரில் பார்த்த கூலித்தொழிலாளி ஒருவர் கூறியுள்ளார்.