தினகரன் கட்சியில் இணைந்த பாஜக பெண் பிரபலம்

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறவுள்ள நிலையில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சியில் இணையும் நிகழ்வு இந்தியா முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று பாஜக பெண் பிரபலம் ஒருவர் அக்கட்சியில் இருந்து விலகி அமமுகவில் இணைந்துள்ளார்.

பாஜக முன்னாள் மாநில மகளிரணி செயலாளரும், அக்கட்சியின் செய்தி தொடர்பாளருமாக இருந்தவர் ஜெமிலா. இவருக்கு தமிழக பாஜக தலைவர்களுக்கும் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ஜெமிலா, டிடிவி தினகரனை அவருடைய இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து அமமுக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். ஜெமிலாவுக்கு அமமுக கட்சியின் உறுப்பினர் அட்டையை கொடுத்த டிடிவி தினகரன் அவருக்கு வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதாக கூறியதாக கூறப்படுகிறது.