Connect with us

‘தளபதி 64’ படம் குறித்த ஆச்சரியமான தகவல்

பொழுதுபோக்கு

‘தளபதி 64’ படம் குறித்த ஆச்சரியமான தகவல்


தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை வரும் ஜூலை மாதத்திற்குள் முடித்து தர தயாரிப்பு தரப்பிடம் அட்லி வாக்குறுதி அளித்துள்ளதாக கூறப்படுவதால், ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

‘தளபதி 64’ படத்தை இயக்க மூன்று இயக்குனர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும், அவர்களில் ஒருவர் வரும் ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அனேகமாக மோகன்ராஜா அல்லது மணிரத்னம் ‘தளபதி 64’ படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ‘தளபதி 64’ படத்தை வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று தயாரிக்கவிருப்பதாகவும் இந்த படம் தமிழின் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.


Continue Reading

அதிகம் படித்தவை

To Top