தல அஜித்தின் அடுத்த மூன்று படங்களின் ரிலீஸ் தேதி இதுதான்


தல அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது தெரிந்ததே. இந்த தகவலை விஷால் இன்று அறிவித்தார்.

அதேபோல் இன்று படப்பிடிப்பு தொடங்கும் தல 59 திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி அஜித் பிறந்த நாள் அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ‘தல 60’ திரைப்படத்திலும் இதே குழுவினர்தான். அஜித், எச்.வினோத், போனிகபூர், யுவன் ஆகியோர் இணையவுள்ளதாகவும் மெகா பட்ஜெட் படமான இந்த படம் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.