Connect with us

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பதவி நீக்கம்

செய்திகள்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பதவி நீக்கம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய தலைவராக கே.எஸ்.அழகிரியை காங்கிரஸ் கட்சியின் தலைமை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்களாக வசந்த்குமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக இன்று டெல்லியில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரை தேர்வு செய்ய ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் புதிய தலைவருக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன், ப.சிதம்பரம், குஷ்பு ஆகியோர்ககள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் திடீரென கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top