Connect with us

தமிழக அரசின் அதிரடி அறிவிப்பால் உதயநிதி ஸ்டாலின் உற்சாகம்

செய்திகள்

தமிழக அரசின் அதிரடி அறிவிப்பால் உதயநிதி ஸ்டாலின் உற்சாகம்

தமிழகத்தில் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த உள்ளாட்சித் தேர்தல் நகராட்சி மற்றும் மாநகராட்சி நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மாநகராட்சி மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி வேலூர் தூத்துக்குடி ஆகிய இரண்டு மாநகராட்சி மேயர் பதவிகள் பட்டியல் இனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், திருச்சி, நெல்லை, நாகர்கோவில், திண்டுக்கல், மதுரை, கோவை, ஈரோடு, மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை உள்பட மீதியுள்ள 6 மேயர் பதவிகள் பொதுப்பிரிவில் உள்ளது. இதனால் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் மகனும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து உதயநிதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top