Connect with us

தமிழகத்தில் தொடர்கிறது ஊரடங்கு: சென்னையிலும் முழு ஊரடங்கு தொடர்வதால் பரபரப்பு

செய்திகள்

தமிழகத்தில் தொடர்கிறது ஊரடங்கு: சென்னையிலும் முழு ஊரடங்கு தொடர்வதால் பரபரப்பு

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மருத்துவர் குழுவினர்களிடம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையை அடுத்து தமிழகத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக சற்றுமுன் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

மேலும் தமிழகம் முழுவதும் ஜூலை மாதம் முழுவதும் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், சென்னை காவல் எல்லை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஜூலை 5ஆம் தேதி வரை முழு ஊரடங்கு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழக அரசின் இந்த அறிவிப்பு ஏழை, எளிய நடுத்தர மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. வேலையின்றி, வருமானம் இன்றி வாடும் ஏழை மக்கள் கொரோனா மற்றும் ஊரடங்கால் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.

Continue Reading
To Top