டெல்லி-வாரணாசி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: பிரதமர் தொடங்கி வைக்கிறார்


டெல்லியில் இருந்து வாரணாசிக்கு 8 மணி நேரத்தில் செல்லக்கூடிய இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையை வரும் 15ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கின்றார்.

சென்னை அயனாவரத்தில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் மணிக்கு 200 கி.மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த ரயிலின் சோதனையோட்டம் சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது.

டெல்லியில் இருந்து வாரணாசிக்கு இந்த ரயிலில் ஏ.சி. கார் சேரில் பயணம் செய்ய ரூ.1,850ம், சிறப்பு வகுப்பில் பயணம் செய்ய ரூ. 3,520ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.