டுவிட்டரில் பிரியங்கா காந்தி! குவியும் ஃபாலோயர்கள்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி சமீபத்தில் தீவிர அரசியலில் குதித்த நிலையில் அவருக்கு உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பிராந்திய பொதுச் செயலாளர் பதவியை சமீபத்தில் ராகுல்காந்தி அளித்தார். இந்த நிலையில் சமீபத்தில் இந்த பதவியின் பொறுப்பை ஏற்ற பிரியங்கா காந்தி இன்று முதல் டுவிட்டரில் இணைந்துள்ளார்.

பிரியங்கா காந்தி @priyankagandhi என்ற முகவரியில் டுவிட்டரில் இணைந்துள்ள செய்தி அறிந்ததும் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் அவரது டுவிட்டர் கணக்கை ஃபாலோ செய்ய தொடங்கிவிட்டனர். இதனால் பிரியங்கா காந்தியை ஒருசில மணி நேரத்தில் 76 ஆயிரம் பேர் ஃபாலோயர்கள் கிடைத்துவிட்டனர். அதுமட்டுமின்றி பிரியங்கா டுவிட்டரில் இணைந்த ஒரே நாளில் அவருக்கு வெரிஃபைடு என்ற புளூ டிக் கிடைத்துவிட்டது.

மேலும் வரும் 2022ஆம் ஆண்டு உபி சட்டமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தியை முதல்வர் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அதற்குள் டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அவரை பிரபலமாக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.