Connect with us

டிக்டாக் எடுக்க முயன்ற இளைஞனுக்கு நேர்ந்த ஆபத்து

செய்திகள்

டிக்டாக் எடுக்க முயன்ற இளைஞனுக்கு நேர்ந்த ஆபத்து

டிக் டாக் வீடியோவுக்காக விளையாட்டாக செய்யும் ஒரு சில சம்பவங்கள் வினையில் முடிந்து உயிரையே பறிக்கும் அளவுக்கு வந்துவிடும். இது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் இளைஞர் ஒருவர் மண்வெட்டியை எடுத்துக்கொண்டு விவசாய நிலத்தில் ஒரு டிக் டாக் வீடியோ பதிவு செய்ய முடிவு செய்தார். அவர் அந்த மண் வெட்டியை மேலே தூக்கி போட்டவாறு உள்ள வீடியோவை பதிவு செய்ய முனைந்த போது அவர் தூக்கிப்போட்ட மண்வெட்டி அவருடைய தலை கீழே விழுந்தது

தலையில் பலத்த காயமடைந்த அந்த இளைஞர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இது இதுபோன்று விளையாட்டாக செய்யும் பல செயல்கள் ஆபத்தில் முடிந்துள்ளது என்பதும் ஒரு சில நேரத்தில் உயிரையும் பறித்து உள்ளது என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற காரணங்களுக்காக டிக் டாக் வீடியோவை தடை செய்ய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

Continue Reading

அதிகம் படித்தவை

To Top